தொண்டனைத் தலைவனாக்கி அழகுப் பார்க்கும் கட்சி – 49ஆவது ஆண்டில் அ.தி.மு.க!

தமிழகத்தின் பிரதான கட்சியும், இந்திய நாடாளுமன்றத்தில் 3 வது முக்கிய பெரிய கட்சியுமான அ.தி.மு.க., தனது 49 வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. அதன் தொடக்க விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க. வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்…

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு, அதன் வெற்றிக்காக பாடுபட்டார். அண்ணாவின் மறைவை அடுத்து வந்த தலைமையை கேள்வி கேட்டு புரட்சியை ஏற்படுத்தினார்.

இதன்காரணமாக1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயரோடு புதிய கட்சியை துவக்கினார்.

கட்சி துவங்கிய 8 மாதத்தில் 1973 -ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் இடைத்தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. அதன் பின், 1977-ல் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து, 127 இடங்களில் முத்திரை பதித்து ஆட்சி அமைத்தது.

1980 மற்றும் 1984-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தி.மு.க.வை தவிடு பொடியாக்கியது அ.இ.அ.தி.மு.க. இதில், 1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், இன்றளவும் குழந்தைகளுக்கு அன்னமிட்டு வருவது சிறப்பு.

1984- சட்டமன்ற தேர்தலின் போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் எம்.ஜி.ஆர். அந்நேரத்தில், அ.இ.அ.தி.மு.க. வை வெற்றி பெற வைக்க பொறுப்பெடுத்து, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராக்கினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, கட்சியை ஒருங்கிணைத்து 1991 நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறியது.

2001-ல் 132 இடங்களை கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதற்கு சிகரம் வைத்தார்போல் 2011 மற்றும் 2016 -ல் ஜெயலலிதா தலைமையில் களம் கண்ட அ.இ.அ.தி.மு.க., சிறப்பான ஆட்சியால் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது.

கடந்த 2016-ல் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால், மீண்டும் அ.தி.மு.க. வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இம்முறையும் அ.தி.மு.க.வின் கதை முடிந்தது என எக்காளமிட்ட எதிர்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு முடிவு கட்டும் விதமாக, கரம் கோர்த்து இணைந்தனர் அடுத்த தலைமுறை தலைவர்கள்.

அனைத்து விதமான தடைகளையும் கடந்து, 49 வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது அ.இ.அ.தி.மு.க.
அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தாலும், தலைவர்கள் மறைந்தாலும், தொண்டனே தலைவனாகி கட்சியின் மாண்பை காத்து நிற்பான் என்பதற்கு அ.இ.அ.தி.மு.க. வே சமகால உதாரணம்.

 

Exit mobile version