போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும் ராகுல், ஸ்டாலின் : அர்ஜூன் சம்பத்

ராகுல் காந்தியின் தேர்தல் அறிக்கையாக, ஏழை குடும்பங்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்குவது என்பது சாத்தியமற்றது என்றும் வாக்குகளை வாங்குவதற்காக அவர் இது போன்று பொய்யான பிரச்சாரம் செய்வதாகவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மக்களை திசை திருப்பும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, போலி வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version