சென்னையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் வேளாண் சந்தையில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்கள் ஒன்றிணைந்து மாதந்தோறும் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் உயிர்மை வேளாண் சந்தையை நடத்தி வருகிறது. மாதத்தில் முதல் சனி, ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்த கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள் உள்ளிட்ட பல வேளாண் பொருள்கள் மற்றும் நெகிழிக்கு மாற்றான காகிதப் பைகள் போன்ற பல்வேறு பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆரோக்கியமான பொருட்களை இங்கு நல்ல விலையில் பெற முடிவதாகவும் இது தங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்