விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி… ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகளுக்காக முதல்வர் அறிவித்த சிறப்பான திட்டங்களை எடுத்துக் கூறுகிறது இந்த தொகுப்பு…

தமிழ்நாடு ஒரு வேளாண் மாநிலம். நம் பசி போக்கும் விவசாயியின் துயர்போக்க வந்த விவசாய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற பெரும் அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்.. இதன்மூலம், 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. ஓர் விவசாயியின் வருத்தம் தெரிந்த விவசாயி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து “விவசாயப் பங்காளன்” என்று பெயர் பெற்றிருக்கிறார்…

அப்படியே கொஞ்சம் நாட்கள் பின்னோக்கிச் சென்றால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களை காக்கும் விதமாக, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்று அறிவித்து, அதை கடந்த பிப்ரவரி 20, 2020 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதிரடி காட்டினார்.

இப்படி, டெல்டா மாவட்ட விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியதற்காக பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டு அதில் அவருக்கு “காவிரிக் காப்பாளன்” என்ற பட்டமும் விவசாயிகளாலேயே வழங்கப்பட்டது.

இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால், மன்னர் காலத்தில் செய்யப்பட்டு வந்த குளங்கள் தூர்வாரும் பணிகளை கையில் எடுத்து குடிமராமத்துப்பணிகள் எனப்பெயரிட்டு, ஏரிகள், குளங்கள், ஆறுகள், கண்மாய்கள், ஊரணிகளை தூர்வாரி ஆழப்படுத்தப் பட்டதால், தண்ணீர் முழுமையாக தேங்கி விவசாயிகள், குடிமக்களின் எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கெங்கு காணினும் பச்சை பசேல் என்று பசுமைத் தமிழகத்தை உருவாக்கி இருக்கிறார்… வரலாற்று சிறப்பு மிக்க குடிமராத்து பணிகளை மேற்கொண்டு தண்ணீர் பற்றாக் குறையையும் சேர்த்து நீக்கியதால், “குடிமராமத்து நாயகன்” என்று தமிழக மக்களால் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடியார்

கடந்த 2016ம் ஆண்டு தொடர்ந்து 2ம் முறையாக முதலமைச்சர்ஆன ஜெயலலிதா போட்ட முதல் கையெழுத்தே விவசாய பயிர்கடன் தள்ளுபடிதான். அம்மா வழியில் ஆட்சிநடத்தும் விவசாயப்பங்காளனும் இன்று பேர் சொல்லும் பிள்ளையாக, ஊர் மெச்சும் பிள்ளையாக விவசாயிகள் மனதில் வலம்வந்து கொண்டிருக்கிறார்..

நியூஸ் ஜெ செய்திகளுக்காக. மனோஜ்குமார் கோபாலன்

Exit mobile version