மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம், மரண தண்டனைக்கு இணையானது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இராகுல் காந்தி, விவசாயிகளுக்கான ஆதரவுக் குரல் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் மரணித்து விட்டதற்கு இது ஒரு சான்று எனவும் இராகுல்காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.