மக்காச்சோள சாகுபடிக்கு உதவும் வேளாண்மைத்துறை

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மக்காச்சோளம் பெரும்பாலும் மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுவதால், ஏராளமான விவசாயிகள் அரசின் மானியம், உயிர் உரம், விதை ஆகியவற்றைப் பயன்படுத்தி, மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம், நல்ல விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோள சாகுபடிக்கு வேளாண்மைத்துறை உதவுவதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version