டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், டெல்டா பகுதி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக , துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 18 லட்சமாக இருந்த அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்தியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். இந்த கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் துணை முதலமைச்சருக்கு வீரவாளை வழங்கி கௌரவித்தனர்.