மக்களை கவர்ந்த விவசாய கண்காட்சி

நாகர்கோவிலில் முதல் முறையாக நடைபெறும் விவசாய கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் மானியத்துடன் கிடைக்கப்பெறும் விவசாய கருவிகள், உபகரணங்கள், இயற்கை உரங்கள், போன்றவை இடம் பெற்றதுடன், பார்வையாளர்கள் அனைவருக்கும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இயற்கை உணவுகள் அங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விவசாய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.

Exit mobile version