கோவையில் வேளாண்மை கண்காட்சி

கோவையில் 4 ஆம் ஆண்டு வேளாண்மை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைந்து வழங்கும் நான்காம் ஆண்டு வேளாண் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடுகள் ஆகியவை, 4 வகையாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், உலகிலேயே குட்டையான மாடுகள், நாட்டு நாய்கள், சண்டைக் கிடா மற்றும் சண்டை சேவல்கள் கலந்து கொண்டன. மேலும், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, விவசாயத்தை மேம்படச் செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப மென்பொருட்கள் மற்றும் கருவிகள், வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றன. திருவிழாவின் 3ம் நாளான நிறைவு நாளில், முக்கியத்துவம் வாய்ந்த ரேக்ளா போட்டிகள் நடைபெற்றன.

Exit mobile version