கடன் தள்ளுபடி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வுகளை கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஷிப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தொலைநோக்கு பார்வையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார். காங்கிரஸ் கட்சி தரும் வாக்குறுதிகள் தற்காலிகமானவை என்று கூறினார். ஆனால், அதைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என விமர்சித்த அவர், 2009 மக்களவை தேர்தலில், விவசாயிகளிடம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். வேளாண்துறை தொடர்பாக சாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை காங்கிரஸ் செயல்படுத்தியிருந்தால், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிக்கே, அவசியமிருந்திருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Discussion about this post