அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட விவசாயப் பாடப்பிரிவு: மீண்டும் சேர்க்க மாணவர்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் துவங்க வேண்டுமென அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1975ம் ஆண்டில் துவங்கப்பட்ட விவசாய பாடப்பிரிவு, மாணவர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்ட இந்த விவசாய பாடப்பிரிவிவை மீண்டும் சேர்க்கவும் இதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருவதால் இந்தப் பாடப்பிரிவு மீண்டும் துவங்கப்பட்டால், மிகுந்த உதவியை அளிக்கும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version