கன்னியாகுமரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகிகள் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பிரம்மநாயகம் என்ற விஜயன் தலைமையிலான 11 நபர்கள் கொண்ட அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் பொதுமக்களுக்கு விவசாய கடனுதவி வழங்கும் விழாவும் தாழக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பொன்னாடை போர்த்தினார். பின்னர் 19 பேருக்கு விவசாய கடனும், 14 பேருக்கு மத்திய கால கடனும் என 81 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடனுதவியினை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.