தமிழகத்தில் 8 நிறுவனங்களுடன் தொழில் தொடங்க ஒப்பந்தம்!

தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில்,10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில், 8 தனியார் நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, புதிய தொழில் தொடங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 13 ஆயிரத்து 507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சோலார் நிறுவனத்துடன் ஐந்தாயிரத்து 423 கோடி ரூபாய் மதிப்பிலும், யோட்டா நிறுவனத்துடன் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், எல்கி நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சிஜிடி சத்ராய் நிறுவனத்துடன் 250 கோடியிலும், என்டிஆர் நிறுவனத்துடன் 200 கோடியிலும், அக்குவா குரூப் நிறுவனத்துடன் 200 கோடியிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜே.எஸ்.ஆட்டோ காஸ்ட் நிறுவனத்துடன் 40 கோடி ரூபாய் மதிப்பிலும், ஜி.ஐ.அக்ரோ டெக் நிறுவனத்துடன் 36 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Exit mobile version