திரௌபதியம்மன் ஆலயத்தில் 107வது ஆண்டு அக்னி வசந்தவிழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திரௌபதியம்மன் ஆலயத்தில் 107வது ஆண்டு அக்னி வசந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் 107வது ஆண்டு அக்னி வசந்தவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக பூங்கரக உலா முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பூங்கரகத்தை அப்பகுதி மக்கள் வரவேற்று, வழிபட்டனர். இதையடுத்து தயாராக வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, பூங்கரகம் முதலாவதாக தீக்குண்டத்தில் இறங்கியது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Exit mobile version