3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஒடிசா மாநிலம் அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் அக்னி 4 ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாயும் திறன் வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏற்றிச்சென்று தாக்கும் வல்லமை படைத்தது. அக்னி ஏவுகனை வரிசையில் இது 4வது ஏவுகணையாகும்.
இதற்கு முன்னர், இது அக்னி 2 பிரைம் என அழைக்கப்பட்டது. இந்த ஏவுகணை 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் முதல் 3 ஆயிரத்து கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது. ஒரு டன் எடையுள்ள அணு ஆயுதங்களை ஏற்றிச்சென்று தாக்கும். இந்த ஏவுகணை 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்டது. இதனை சாலை வழியாக ஏற்றிச்சென்று ஏவ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்னி 2 மற்றும் அக்னி 3 ஏவுகணைகளை காட்டிலும் நவீனமானது குறிப்பிடத்தக்கது.