கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதித்த மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு, அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்த விசாரணை அமைப்புகளுக்குத் தேவைப்படும் நேரத்தில், தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர் மற்றும் கணினியின் உரிமையாளர் அனைத்துவித தொழில்நுட்ப வசதிகளையும் செய்ய ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஒத்துழைக்க மறுத்த 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் எம்.எல். ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

Exit mobile version