கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திமுகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகின்றனர்..
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யபட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல் திமுக சார்பில் பூங்குழலி என்ற வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், சத்தியவாடி மற்றும் கோமங்கலம் பகுதியில், திமுக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணியினரே போட்டியிடுகின்றனர். கூட்டணிக் கட்சிக்கு சரியான பங்கீடுகளை தராமல் இப்படி அவர்களுக்குள் கும்மாங்குத்து நடந்து வருவது, அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.