மீண்டும் பார்வைக்கு, வந்த மோனாலிசா ஓவியம்!

பிரான்சில் நாட்டில் மிகவும் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நாட்டில் உள்ள, லூவர் அருங்காட்சியகம் உலகப்புகழ் பெற்றது. அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையின் அருகில் அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு 97 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகின்றனர். உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான். மொத்தம் 3,80,000 க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் இங்கு காண்ப்படுகிறது. அவற்றுள் ஒவியங்கள் மட்டும் 35,000க்கும் அதிகம்.

16ஆம் நூற்றாண்டில் ஓவியர், லியனார்டோ டாவின்சி வரைந்த ‘மோனாலிசா ஓவியம்’லூவர் அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.
சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து இழுக்கின்ற இந்த ஓவியம். பழமையான அறையில் கடந்த 15 ஆண்டுகளாக மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாக சுற்றாலா பயணிகள் அதிகமானவர்கள் பார்வையிடும் நேரத்தில். அந்த அறை அத்தனை சிறந்த அனுபவத்தை தரவில்லை என விமர்சனங்கள் அதிகம் வந்தன. அதனால், கடந்த மாதங்களுக்கு முன்னர் மறு சீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டதால், மோனாலிசா ஓவியம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மறுசீரமைப்பு முடிந்து மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்பட்டது. இதனை அங்குள்ள சுற்றாலா பயணிகள் தங்களுடைய மகிழ்சியை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version