மீண்டும் அயோத்தி மீது உச்சநீதிமன்றத்தில் மனு!

அயோத்தி வழக்கின் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி மவுலானா சையது ஆசாத் ரசீதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அயோத்தியில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அயோத்தியில் மற்றொரு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என சன்னி வக்பு வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் மூல மனுதாரரின் வாரிசான மவுலானா சையது ஆசாத் ரசீதி என்பவர், தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Exit mobile version