ஐபிஎல் தொடரின் 7வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், த்ரிலுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூரு அணியும் அதிரடியாக ஆடியது.
எந்த கட்டத்திலும் எந்த அணி ஜெயிக்கும் என ரசிகர்கள் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மலிங்கா வீசினார். ஏபிடி களத்தில் இருந்ததால் பெங்களூரு அணிக்கு வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கை இருந்தது. டியூபே முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரி வராததால் கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தை டியூபே பவுண்டரி நோக்கி அடித்த பந்தை ரோஹித் சர்மா பில்டிங் செய்தார். எப்படி தோற்றுவிட்டோம் என்பதால் டியூபே, ஏபிடி ரன் ஓடவில்லை. இதனால் மும்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.
இதனிடையே, மலிங்கா வீசிய கடைசி பந்து No ball ஆகும், ஆனால் அது நடுவர் கவனிக்காமல் போனார். இந்த சம்பவம் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த விராட் கோலி, “நாம் விளையாடுவது கிளப் கிரிக்கெட் அல்ல… ஐபிஎல் கிரிக்கெட் …” என்று கூறினார். “நடுவரின் இது போன்ற தவறுகள் கேலிக்குரியது” என்றும் அவர் ஆவேசமாக கூறினார். இது இந்த வருட ஐபிஎல் தொடரின் 2வது சர்ச்சையாகும். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இடையேயான போட்டியில், அஸ்வின் ஜாஸ் பட்லரை அவுட் ஆகிய முறை ஐபிஎல்-லில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை அடங்குவதற்கு தற்போது இந்த சர்ச்சை அரங்கேறியுள்ளது.