கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலமுந்தல், கீழமுந்தல், வாலிநோக்கம், மாரியூர் போன்ற கடற்கரைப்பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர். ருசிமிகுந்த சீலாமீன் கிடைத்ததால் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், கஜா புயலுக்குப் பிறகு கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கரைவலை மீன்பிடிப்பில் சீலா மீன் கிடைக்கவில்லையென மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஒருமுறை கரைவலை இழுக்க 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், தற்போது குறைந்த அளவே கிடைக்கும் மீன்களால் போதிய லாபம் இல்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.