சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியுள்ள நிலையில் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் இன்று பிரிகிறது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக நெருங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் நாள் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தின் உயரம் 5 முறை மாற்றியமைக்கப்பட்டு நிலவின் மிக அருகில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வாக, சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் அமைப்பு இன்று பிரிகிறது. இதைத் தொடர்ந்து நிலவை வலம் வரும் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்கிறது.