கோவையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதால், பொதுமக்கள் பகலில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரத்தில் புழுக்கம் இருந்ததால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், காந்திபுரம், லாலிரோடு, செல்வபுரம், பேரூர், ரயில் நிலையம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.