நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்,வித்யாபாலன், ரங்கராஜ்பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற “பிங்க்” படத்தின் ரீமேக்கான இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

கடந்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் போனிகபூர் “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.

இந்த நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து அஜித் படத்திற்கு வரும் அப்டேட்களால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version