விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள ஏரியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டிவனத்தை அடுத்துள்ள ஏரியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார் குப்பத்தில் உள்ள ஏரிக்கு தொண்டி ஆற்றிலிருந்து நீர் கிடைக்கபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், இந்த ஏரி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ. 4, 45 ,000 செலவில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணியால், தற்போது, ஏரியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.