5 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி

பெய்ட்டி புயல் காரணமாக கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நாகை மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்கு புறப்பட்டனர்.

புயல் சின்னம், கடல் சீற்றம், தரைக்காற்று காரணமாக கடந்த 13 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கடல் சீற்றம் தணிந்ததை அடுத்து, மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு மீன்வளத்துறை, அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கி வருகிறது. கடந்த 5 நாட்களுக்குப் பிறகு, மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளனர். தங்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்கும் என்றும் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version