4நாட்கள் கழித்து மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவந்த அமைச்சர்கள்

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள், அவரது குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மழுப்பலாக பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளியில், 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர், இறந்த மாணவியின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மழுப்பலாக பதில் அளித்தனர்.

 

Exit mobile version