5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று நடைபெற உள்ளது.
4ஜி அலைகற்றை ஏல விற்பனைக்காக இருப்பு தொகையாக சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.
இதில், ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மொத்தம் 13 ஆயிரத்து 475 கோடி ரூபாயை இருப்பு தொகையாக செலுத்தியுள்ளதாக தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
5ஜி சேவைக்கான அலைகற்றை ஏலம் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ள நிலையில், இந்த ஏலத்திற்கு பின் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கும் என்றும், கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது.