34 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்

34 நாட்களுக்குப் பின்பு பாம்பன் ரயில் பாலத்தில், ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, காலி பெட்டிகளுடன் பாம்பன் தூக்குபாலத்தில் ரயில் இயக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version