சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் எனவும், தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வாயு புயலாக மாறி குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 10 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.