10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சர்வதே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதையொட்டி வீரர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிகப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றும்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி காராச்சியில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, வீரர்களின் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் இலங்கை வீரர்களின் பாதுகாப்பு பணிக்காக குவிக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இலங்கையின் மலிங்கா, கருணாரத்னே, மேத்யூஸ், சண்டிமால், திசரா பெரேரோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், திரிமண்ணே தலைமையில் இலங்கை அணி, களம் இறங்க உள்ளது. அதேபோல், சர்ப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.