ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான எம்கே ரஞ்சித் சின்கா தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆப்ரிக்கன் சிறுத்தைகளின் நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.  மொத்தம் 19 ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்திய காடுகளில் அனுமதிக்கும் விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version