ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான 7வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 7வது லீக் போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் குல்பாதீன் நையீப் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியும் தனது முதல் போட்டியில் வலுவான ஆஸ்திலியாவிடம் 7 வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. கார்டிஃபில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணரத்னேவும், குசல் பெரெராவும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில்  கருணரத்னே 30 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை பேட்ஸ்மேன்களில் நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். 28 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டை பறிகொடுத்து 173 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. 

Exit mobile version