ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை முன்பு தற்கொலை படையினர் தாக்குதல் – சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி 

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் காபூலில் உள்ள சிறைச்சாலை முன்பு தற்கொலை படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிறைச்சாலை ஊழியர்களும், சிறையின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரும் அடங்குவர். 100க்கும் மேற்பட்ட சிறைச்சாலை ஊழியர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version