உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி வெற்றி பெற்றது.
12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியில், குல்பாதீன் நையீப் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டகாரர் ரஹ்மத் ஷா 35 ரன்களிலும், குளாப்தின் நயிப் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களம் இறங்கிய இக்ரம் 24 ரன்களும், அஸ்கர் அஃப்கான் 42 ரன்கள் எடுத்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். நஜிபுல்லா 42 ரன்களுடனும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டம் இழந்து, முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் இமத் வாசிம், வகிப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் , ஷாகின் அஃப்ரிதி 4 விக்கெட்களும் எடுத்தனர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டகாரர் ஃபகிர் ஜமான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து களம் இறங்கிய இமாம் உல் ஹக் 36 ரன்களும் , பாபர் 45 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இமத் வாசிம் 49 ரன்கள் எடுத்தார். அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. பரபரப்பான கடைசி ஓவரில், இமத் வாசிம் ஒரு பவுண்டரி அடிக்க 49.4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.