ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையே அமைத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையே பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்தை நடைபெற்று வந்தன. இந்நிலையில்,  கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து 14 மாதங்களில் விலக்கிக் கொள்ள ஒப்பு கொண்டுள்ளது. அதே போல, அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பை துண்டித்துக் கொள்ள தலிபான் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதன், மூலம் ஆப்கானிஸ்தானில் விரைவில் அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version