ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான ஹெராத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குசார்கா(Guzargah) மசூதியில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அடையாளம் தெரியாத அமைப்பால் அங்கு குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் தொழுகையை தலைமை ஏற்று நடத்திய மவுலவி எனப்படும் தலைமை போதகர் முஜிப் ரஹ்மான் அன்சாரி உயிரிழந்ததாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.