டிக்டாக் பிரபலம் வினிதா, வீட்டிலிருந்து எடுத்து சென்ற நகைகளை தன்னிடம் தரவில்லை என வினிதாவின் டிக்டாக் தோழி அபி வாக்குமூலம் அளித்துள்ளார்.
டிக்டாக் சர்ச்சையின் மூலம் பிரபலமான வினிதா என்பவர், அதே டிக்டாக்கின் மூலம் அபி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை வினிதாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், வினிதா தனது அக்காவின் 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, வினிதா அவரது தோழியான அபியுடன் சேர்ந்து 20 சவரன் நகையை எடுத்து சென்று விட்டதாக வினிதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அபியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, வினிதா தனக்கு எவ்வித நகைகளையும் அனுப்பவில்லை என வாக்கு மூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் அபியிடம் தொடர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.