கள்ளக்காதல் தகராறில், மூதாட்டி மீது ஆசிட் வீசி கொலை

நாமக்கல்லில், கள்ளக்காதல் தகராறில், மூதாட்டி மீது ஆசிட் வீசி கொலை செய்த நபரை, பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி தனம் என்பவரின் மகள் விஜயா, சாமுவேல் என்பவருடன் முறை தவறி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாமுவேலுக்கு விஜயாவின் தங்கை மகள் வசந்தி மீது ஆசை ஏற்பட, அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், ஆசிட் மற்றும் கத்தியுடன் தனத்தின் வீட்டிற்குள் புகுந்து, வசந்தியை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மூதாட்டி தனத்தின் மீது ஆசிட்டை வீசியதோடு, கத்தியால் குத்தி கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு கூடிய பொதுமக்கள் மீதும், சாமுவேல் ஆசிட்டை ஊற்ற, அதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மூதாட்டியின் வீட்டின் முன் குவிந்த மக்கள், தப்பியோட முயன்ற சாமுவேலை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான சமுவேல் மீது ஏற்கனவே பல கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version