சிரியா மாகணத்தில் வான்வழித் தாக்குதல் கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. அந்த தாக்குதலில் மனதை உருக்கும் சம்பவங்களும் புகைப்படங்களும் வைரல்லாகி வருகின்றது.
சிரியா அரசாங்கப் படை, ரஷ்யா நாட்டு உதவிடன் ‘இட்லிப்’ என்கிற மாகாணத்தைக் கைப்பற்ற தீவிரமாக திட்டம் திட்டிவந்தது. இந்த நிலையில் புதன்கிழமையன்று சிரியா நாட்டில் வான்வழி தாக்குதலில் நடத்தப்பட்டது. அதில் அங்குள்ள குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாகவும் ‘மாரெட் அல்-நுமன்’ என்கிற நகரில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று இளம் குழந்தைகளை பறிகொடுத்தாகவும் அங்குள்ள செய்திகளில் வெளியாகின.
தற்போது, அந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளும் உயிர் பார்த்து ஒரு தந்தை கதறி அழும் புகைப்படம் நெஞ்சை உருக்கும் அளவுக்கு வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து, சிரியா நாட்டில் 3 மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக பலரும் தப்பி ஓடிவருகின்றார்கள்.