கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வேளாண்மை துறை சார்பில் வயல் ஆய்வு மற்றும் கலந்துறையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், அமெரிக்கன் படைப் புழுவால் விவசாயம் பாதிக்கபடுவதாகவும், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேளாண்மை துறை விஞ்ஞானிகள் குழு,மக்காச்சோள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, படை புழுவை கட்டுப்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். விஞ்ஞானிகள் விவசாய நிலங்களுக்கே சென்று வயல்களை ஆய்வு செய்தனர். அப்போது, கோடை உழவு செய்தல், ஒரே சமயத்தில் விதைப்பு, விதை நேர்த்தி செய்தல், மண்ணில் வேப்பம் புண்ணாக்கு இடுதல் போன்ற ஆலோசனைகளையும் வழங்கினர்.