கரூரில் எரியூட்டு ஆலை அமைக்க ஆலோசனைக் கூட்டம்

கரூரில் எரியூட்டு ஆலை திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகளில் இருந்து, மட்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு, உரமாக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை எரியூட்டு ஆலையில், எரித்து அதன் மூலம் கிடைக்கும் சாம்பல் மூலம், பேவர் பிளாக் செங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த எரியூட்டு ஆலை தமிழகத்தில் ஈரோட்டில் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இதனை கரூர் நகராட்சியிலும் பயன்படுத்துவதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version