சென்னை தலைமை செயலகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்கான ஆலோசனை கூட்டம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், நீட் பயிற்சி பொறுப்பு அதிகாரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு சார்பில் 413 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சியை எப்போது துவங்கலாம், நிதி ஒதுக்கீடு, பாடத்திட்டம், பயிற்சி ஆசிரியர்கள் ஆகியவை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை செய்யப்பட்டது.