நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகள், மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவது, வாகன சோதனை, அரசியல் கட்சியினரின் பிரசாரங்களை கண்காணிப்பது, பதற்றமான வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Exit mobile version