காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்

காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். மக்களவை தேர்தலுடன் இணைந்து அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்போது காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மாநிலத்தில் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலையையொட்டி மக்களவை தேர்தலுடன் இணைத்து காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படாது என சுனில் அரோரா தெரிவித்தார்.

இந்நிலையில் காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்துவது குறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனையின் போது காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version