இந்தியாவில் தொழில் தொடங்க சூழல்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளுக்குள் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்று மத்திய பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசு வலியுறுத்தி வருகிறது. இதனையொட்டி மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்துதல், சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு, வர்த்தக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

Exit mobile version