புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கழக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைப்படி, புதுச்சேரி மாநில கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற அதிமுக தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைவதற்கு கழக தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version