தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 520 எம்.எல்.டி. தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், குறுகலான சாலைகள் கொண்ட வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சேலம் உள்ளிட்ட 8 மாநகராட்சிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை என்றும், மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.