அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு கேட்க அறிவுறுத்தல்

அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்குமாறு, அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 55 மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களது வெற்றிக்கு நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடும் வகையில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version