ஜம்மு காஷ்மீரில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் காஷ்மீர் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ராணுவம், விமானப்படை, மற்றும் பாதுகாப்பு படை ஆகிய முப்படைகளும் தயார் நிலையில், இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தால் எல்லையில் பதற்றமாக சூழ்நிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில், தீவிரவாத குழுக்கள் மூலம், காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில தலைமைச் செயலர் சுப்ரமணியமும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version